தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்!
தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்துள்ளதுடன், தமிழகத்தில் தக்காளி விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் தக்காளி விலை அதிகரித்துள்ளது தொடர்பாக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், ஆந்திராவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக தான் விலை அதிகரித்துள்ளதாகவும், விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் உழவர் சந்தை திட்ட பணிகளை மேம்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.