அரசு விதிக்கின்ற கட்டுப்பாடுகள் சரியாக நடைமுறைப்படுத்தப்படாததால் கொரோனா தொற்று கணிசமாக அதிகரித்துள்ளது என அதிமுக அறிக்கை.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தாக்கம் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்ததையடுத்து, வணிக வளாகங்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும், சுற்றுலாத் தலங்களிலும் கூடிய கூட்டத்தை கட்டிக்காட்டி, இது மூன்றாவது அலைக்கு வழிவகுத்து விடுமோ என்ற அச்சத்தினை நான் ஏற்கனவே எனது அறிக்கை வாயிலாக வெளிப்படுத்தியிருந்தேன்.
தற்போது, இரண்டு, மூன்று நாட்களாக கொரோனா குறித்து வெளி வரும் அரசின் அறிக்கையினை பார்க்கும்போது, மூன்றாவது அலை தவிர்க்க முடியாததாகி விடுமோ என்ற சூழ்நிலை எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 20 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருந்தாலும், சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் தான் கணிசமான அளவுக்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
இதற்குக் காரணம் அரசு விதிக்கின்ற கட்டுப்பாடு விதிமுறைகளை சரியாக நகடமுறைப்படுத்தப்படாததுதான். கேரள மாநிலத்தில் அண்மைக் காலமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. எனவே, கேரளாவிலிருந்து கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி வழியாக தமிழ்நாட்டிற்குள் வருபவர்களை தீவிரமாக கண்காணிப்பது மிகவும் அவசியம்.
கொரோனா பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதை முதலமைச்சர் நன்கு அறிவார்கள். அதனால்தான், 30 அன்று முதலமைச்சர் அவர்களால் பெரியிடப்பட்ட செய்தி வெளியீட்டிலேயே “தமிழ்நாட்டில் கூடுதல் ஊர்வுகளின்றி ஊாடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு” என்றும், “விதிமுறைகளை கண்டிப்புடன், நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறைக்கு அறிவுரை என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இது தவிர, சென்னையில் 9 இடங்களில் கடைகள் செயல்பட தடை செய்யபட்டுள்ளது. சில வழிபாட்டுத் தளங்களில் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டியிருப்பதும் உண்மையில் வரவேற்கத்தக்கது. இருப்பினும், தடை விதிக்கப்படாத பகுதிகளில் கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணித்து நடைமுறைப்படுத்துவதில் கணக்கம் நிலவுவதாக தெரிகிறது. கட்டுப்பாடுகள் விதிகளில் காற்றில் பறக்கவிடப்படுவதாக தகவல்களும் வந்து கொண்டியிருக்கிறது.
எனவே, முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள், இதில் தனிக் கவனம் செலுத்தி, கட்டுப்பாட்டு விதிகள் கடைபிடிக்கப்படுவதை நூறு விழுக்காடு உறுதி செய்து, மூன்றாவது அலையிலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…