அரசு மருத்துவமனையில் வசூல் வேட்டை..! கண்டுகொள்ளாத அரசு..!

Default Image

பிரசவத்திற்கு 2000, அறுவை சிகிச்சைக்கு 500 ரூபாய் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பட்டியலிட்டு தென்காசி அரசு மருத்துவமனை ஊழியர்கள் அடாவடியாக பணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சிவகிரி, செங்கோட்டை, மேக்கரை, ஆலங்குளம்  உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளியாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். தரமான சிகிச்சையில் குறைபாடில்லை என்ற கருத்துக்கு மத்தியில், லஞ்சம் தலைவிறித்தாடுவதாக புகார் எழுந்துள்ளது.

பணம் கொடுத்தால் மட்டுமே நோயாளிகள் கவனிக்கப்படுவார்கள் என்ற சூழலை மருத்துவமனை ஊழியர்கள் ஏற்படுத்தி வைத்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிரசவம் நடந்தால் 2000 ரூபாய், அறுவை சிகிச்சைக்கு 500 ரூபாய், படுக்கையை மாற்றுவதற்கு 200 ரூபாய், பார்வையாளர்கள் வந்து செல்வதற்கு அவ்வபோது 50 ரூபாய் என மருத்துவமனை ஊழியர்கள் போட்டி போட்டுக்கொண்டு கட்டாய வசூலில் ஈடுபடுவதாக புலம்புகின்றனர். தனியார் மருத்துவமனைக்கு சென்றால் பணம் செலவாகும் எண்ணத்தில் அரசு மருத்துவமனையை நாடினால், பணியாளர்களோ பணம் கேட்டு படதாபாடு படுத்துவதாக கவலை தெரிவிக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடப்பதாக தெரிவிக்கும் பொதுமக்கள், மருத்துவமனை நிர்வாகம் தனி கவனம் செலுத்தி கண்காணித்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று ஏக்கத்துடன் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்