வீடியோ வெளியிட்ட மாணவர்கள்.. தமிழக அரசு உடனடி நடவடிக்கை.!
வங்கதேச மாணவர்கள் போராட்டம்: வங்கதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இடஓதுக்கீடு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உச்சநீதிமன்றம் இந்த சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தாலும், அரசுக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதில் சில மாணவர்கள் உயிரிழப்புகளும் நேரந்தன.
இதனால், கல்லூரிகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. வங்கதேச மருத்துவ கல்லூரிகளில் இந்திய மாணவர்களும் பயின்று வருகின்றனர். அவர்களையும் நாடு திரும்ப அந்நாட்டு அரசு கூறியது. இதனை அடுத்து, கல்லூரி நிர்வாகம் அவர்களை இந்திய எல்லையில் பத்திரமாக கொண்டு வந்து சேர்த்துள்ளது.
இதில் சுமார் 40 தமிழக மாண்வர்கள் உள்ளனர். அவர்கள் மேற்கு வங்க மாநிலம் ஹல்லி எனுமிடத்தில் உள்ளனர். அங்கிருந்து தமிழகம் வர முடியாமல் தவித்த மாணவர்கள், அதனை வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டு தமிழக அரசு உதவ கோரிக்கை முன்வைத்தனர்.
அந்த வீடியோவில் மாணவர்கள் பேசுகையில், நாங்கள் வங்கதேசத்தில் மருத்துவம் பயின்று வருகிறோம். சில நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் தீவிரமடைந்ததால் கல்லூரி நிர்வாகம் எங்களை தாயகம் திரும்ப கூறிவிட்டனர். அவர்களே பேருந்து மூலம் எல்லை வரை வழியனுப்பினர். அதன் பிறகு இங்கு (ஹல்லி) இருக்கிறோம். இங்கிருந்து தமிழகம் திரும்ப வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்த செய்தி எக்ஸ் சமூக வலைதளத்தில் தனியார் செய்தி சேனலால் பதியப்பட்டது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், தகவலுக்கு நன்றி. தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி, இன்று முதல் கட்டமாக இரவு 7.30 மணியளவில் வங்கதேசத்திலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு தமிழ்நாட்டை சார்ந்த 30 மாணவர்கள் அழைத்து வரப்படவுள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போதைய தகவல் படி 40 மாணவர்கள் அழைத்து வரப்படவுள்ளார்கள் என அந்த லிஸ்டையும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில்பதிவிட்டுள்ளார்.
தகவலுக்கு நன்றி…. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் படி, இன்று முதல் கட்டமாக இரவு 7.30 மணியளவில் வங்கதேசத்திலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு தமிழ்நாட்டை சார்ந்த 30 மாணவர்கள் அழைத்து வரப்படவுள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
— Gingee K.S.Masthan ( செஞ்சி மஸ்தான் ) (@GingeeMasthan) July 21, 2024