தமிழகத்தில் 78 தடுப்பணைகளை கட்டுவதற்கான பணிகளை அரசு தொடங்கியுள்ளது …!முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் 78 தடுப்பணைகளை கட்டுவதற்கான பணிகளை அரசு தொடங்கியுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், தமிழகத்தில் 78 தடுப்பணைகளை கட்டுவதற்கான பணிகளை அரசு தொடங்கியுள்ளது.ஆற்றில் வரும் நீர் ஒரு சொட்டு கூட வீணாக கடலில் கலக்காத வகையில் தடுப்பணைகள் கட்டப்படும். ஏரி, குளங்களை ஆழப்படுத்தவும், நதிகளை இணைப்பது குறித்தும் ஆய்வு செய்ய சிறப்புகுழு அமைக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.