தமிழ்நாட்டில் அரசு கருத்தரிப்பு மையம்.. இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இந்தியாவிலேயே அரசு சார்பில் கருத்தரிப்பு மையம் தமிழ்நாட்டில் தான் முதன் முறையாக தொடங்கபட உள்ளது என அமைச்சர் தகவல்.
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசு கருத்தரிப்பு மையம் தொடங்கப்பவுள்ளது மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், சென்னை எழும்பூரிலும், மதுரையிலும் ரூ.5 கோடி மதிப்பில் அரசு கருத்தரிப்பு மையங்கள் செப்டம்பர் மாதத்தில் நிறுவப்பட உள்ளது.
விரைவில் மதுரையில், செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கருத்தரிப்பு மையம் தொடங்கப்படவுள்ளது. எனவே, இந்தியாவிலேயே அரசு சார்பில் கருத்தரிப்பு மையம் தமிழ்நாட்டில் தான் முதன் முறையாக தொடங்கபட உள்ளது. இதனிடையே, தமிழகத்தில் ஆயிரத்து 21 மருத்துவர் பணியிடங்களும், 980 மருந்தாளுநர் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்றும் கூறியிருந்தார்.