தமிழகம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகியிருப்பதை அரசு உறுதி செய்கிறது-மு.க ஸ்டாலின் .!
தமிழகம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகியிருப்பதை அரசு உறுதி செய்கிறது என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சிறுமி கலைவாணி வீட்டில் தனியாக இருந்த போது, கிருபானந்தன் என்பவரால், பாலியல் வன்கொடுமை செய்து மின்சாரம் செலுத்தி கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு, வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, கிருபானந்தானை திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த விடுதலையை கண்டித்து பலரும் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், திண்டுக்கல்லில் 12 வயது சிறுமி மின்சாரம் பாய்ச்சிக் கொல்லப்பட்ட வழக்கில், சாட்சியங்களை அரசு நிரூபிக்காததால் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை ஆகியிருக்கிறார். தமிழகம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகியிருப்பதை அரசு உறுதி செய்கிறது! #JusticeForKalaivani-க்காக மேல்முறையீடு செய்க! என பதிவிட்டுள்ளார்.