#Breaking:அரசு வேலைவாய்ப்பு;இவர்களுக்கு MBC பிரிவில் இட ஒதுக்கீடு – தமிழக அரசு!

Published by
Edison

அரசு வேலைவாய்ப்பில் 3 ஆம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு வேலைவாய்ப்புகளில் 3 ஆம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 3 ஆம் பாலினத்தவரான சுதா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.மேலும், உச்சநீதிமன்றம் தங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ள நிலையில்,மாநில அரசும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்,”அரசு வேலைவாய்ப்பில் 3 ஆம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்(MBC) வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.அதன்படி,அரசு வேலைவாய்ப்பில் 3 ஆம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.எனவே, சம்மந்தப்பட்ட 3 ஆம் பாலினத்தவர் பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் என சான்றிதழ் கொடுத்தால் அவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படும்.அதே சமயம் பெண் என்பதன் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்பட்டால் அவர்களுக்கு பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் இடம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து,தமிழக அரசு அளித்த விளக்கத்தை ஏற்று ஏற்கனவே இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் மீண்டும் இட ஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

Recent Posts

இலவசம் முதல் ரூ.25 லட்சம் வரை… டெல்லி பொதுத்தேர்தல் வாக்குறுதிகள் : ஆம் ஆத்மி vs பாஜக vs காங்கிரஸ்

இலவசம் முதல் ரூ.25 லட்சம் வரை… டெல்லி பொதுத்தேர்தல் வாக்குறுதிகள் : ஆம் ஆத்மி vs பாஜக vs காங்கிரஸ்

டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…

5 minutes ago

“ஆளுநர் ரவி மன்னிப்புக் கேட்க வேண்டும்”..திமுக சட்டத்துறையின் 3வது மாநில மாநாட்டில் தீர்மானம்!

சென்னை : இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில்…

6 minutes ago

8 இடங்களில் செயின் பறிப்பு : மக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது – அண்ணாமலை!

சென்னை : தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு…

19 minutes ago

“ஒரு குடும்பஸ்தன் உருவாவது எப்படி?” கலக்கலாக வெளியான மணிகண்டனின் புதுப்பட ட்ரைலர் இதோ…

சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…

1 hour ago

சண்டே ஸ்பெஷல்..! மணப்பட்டி சிக்கன் சுக்கா செய்வது எப்படி.?

சென்னை :மணப்பட்டி  சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…

1 hour ago

புத்தக காட்சித் திருவிழா : “1,125 புத்தகங்கள் மொழிபெயர்ப்பு..” மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …

1 hour ago