அரசு ஊழியர்களுக்கு பண்டிகைக்கால முன்பணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு
பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவிப்புகளை வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிவிப்பில்,அரசு ஊழியர்கள் பண்டிகை முன் பணம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.இதற்கான ஆணை விரைவில் வெளியிடப்படும் .ஏற்கனவே இருந்த ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் வேளச்சேரி ரயில் நிலையத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் ரூ.80 கோடியில் கட்டப்படும்.தமிழ்நாடு தொலைநோக்கு திட்டத்தின் கீழ் ரூ.4,860 கோடியில், 1.6 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்றும் அறிவித்தார்.