போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ_ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டம்:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இன்று (ஜனவரி 22-ஆம் தேதி) முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்:
எனவே இதை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இன்று (ஜனவரி 22-ஆம் தேதி) முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தது.
கைது :
நேற்று முதல் இன்றும் ஊழியர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து இன்று பல்வேறு பகுதியில் அரசு ஊழியர்கள் சாலை மறியல் , இரயில் மறியல் என போராட்டம் தொடர்ந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் அரசு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சை , மன்னார்குடி , சேலம் , திருவாரூர், திருச்சி , காட்பாடி , வாணியம்பாடி , திருவண்ணாமலை வந்தவாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு ஊழியர்களை காவல்துறையினர்கைது செய்து வருகின்றனர்.அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தித்த வேண்டுமென தொடர்ந்து அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நீலகிரி : கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன,…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி அடுத்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை: வடகிழக்கு பருவமழைக் காலத்தில், அடிக்கடி பரவும் நோய்கள், குறிப்பாக டெங்கு, வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தவிர்க்க முடியாத…
பெங்களூர் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணிக்கு ஏலத்தில் சென்று விளையாடப்போகிறார்கள் என்ற…
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படம் வரும் நவம்பர்…