கணக்கீட்டை காட்டி அரசு தப்பிக்க முடியாது – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

கணக்கீட்டை காட்டி அரசு தப்பிக்க முடியாது. மின் கட்டணத்தில் நடந்திருப்பது கொள்ளைதான்.
கொரோனா ஊரடங்கிற்கு பின், மக்களிடம் அதிகமாக மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனாவுக்காக தள்ளி வைக்கப்பட்ட மின்கட்டண வசூலை கொரோனா தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் கட்டாயப்படுத்தி வசூலித்துக் கொண்டிருக்கிறது என்றும், கணக்கீட்டை காட்டி அரசு தப்பிக்க முடியாது. மின் கட்டணத்தில் நடந்திருப்பது கொள்ளைதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சராசரியாக ஒரு நாளைக்கு 8 யூனிட் மின்சாரம் செலவழிக்கும் ஒரு குடும்பம், கூடுதலாக ஒரு நாளைக்கு 1/2 யூனிட் அதிகமாக செலவழித்தாலே, அந்த குடும்பம் ரூ.1130 க்கு பதிலாக ரூ.1846 கட்டணம் செலுத்த வேண்டி வரும்.
எனவே, குறைந்தபட்சம் தற்போதுள்ள வருமானமற்ற சூழ்நிலையை கவனத்தில் எடுத்து கொண்டு, 2 மாதத்திற்கு ஒருமுறை 500 யூனிட்டுக்கு அதிகமாக பயன்படுத்தினாலும், 500 யூனிட்டுக்கு கீழே என்ன கட்டண விகிதம் கணக்கிடப்பட்டதோ, அதே கட்டண விகிதத்தையே 500 யூனிட்டுக்கு மேலே பயன்படுத்துவோருக்கும் கணக்கிட வேண்டும் என்றும், கொரோனா நெருக்கடிகள் தீரும் வரை இத்தகைய கணக்கீட்டு முறையையே செயல்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025