கோவையை சார்ந்த பூமிராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்கு தொடுத்தார்கள். இறந்தவர்களின் உடல்கள் இறுதி சடங்கு செய்ய நிவாரணம் வழங்க வேண்டும், அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோவை பகுதியில் கொரோனா பரவல் குறையாமல் உள்ளது. இதனால் கூடுதல் மையங்கள் ஏற்படுத்த வேண்டும் என தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த இரண்டு அறிக்கைகளும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணை வந்தது. அப்போது, கோவை உள்ளிட்ட பகுதிகளில் நிலைமை கட்டுக்குள் இருப்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள் நீதிமன்ற தலையீடு இல்லாமல் தொடர வேண்டும் என விரும்புகிறோம். அரசின் கொள்கை முடிவு குறித்த பொதுநல வழக்குகளில் சில விளம்பரத்திற்காக தரப்படுகின்றன என நீதிபதிகள் தெரிவித்தனர். மத்திய, மாநில அரசுகள் பல நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் உயிரிழக்கும் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…