எந்த எந்த ஆலைகள் தொடர்ந்து இயங்கலாம் என அரசாணை வெளியீடு.!

தமிழகத்தில் சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு, சிமெண்ட், கரும்பு, உர கண்ணாடி, டயர் ஆலைகள் ஆகியவை தொடர்ந்து இயங்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி உள்ளது. இந்த கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, மத்திய அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. தற்போது அந்த ஊரடங்கு தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றியமையா உற்பத்தி மற்றும் தொடர் செயல்பாடுகளை கொண்டவை தவிர பிற தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. சமீபத்தில் மத்திய அரசு மேலும் சில தொழிற்சாலைகளுக்கு இயங்க விலக்கு அளித்துள்ளது.
அதன், அடிப்படையில் தமிழ்நாட்டில் சில தொழிற்சாலைகளில் படிப்படியாக அனுமதிப்பது தொடர்பாகவும், கொரோனா பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி காணொலி மூலம் தொழிலதிபர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், தமிழகத்தில் சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன ஆலைகள், கரும்பு, உர கண்ணாடி, டயர், மிகப்பெரிய காகித ஆலைகள் ஆகியவை தொடர்ந்து இயங்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.