தரமற்ற உணவுகளை கூடுதல் விலைக்கு விற்றதால் விக்கிரவாண்டி அருகே 5 உணவகங்களில் அரசு பேருந்துகள் நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 25.01.2022 அன்று பொது மக்களின் புகார்களை ஒட்டி மாமண்டுர் பயணவழி உணவகத்தில் தரமற்ற உணவு வழங்கப்பட்டது கண்டறிந்து அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நிறுத்தத் தடை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் இளங்கோவன் தலைமையில் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் குழு, போக்குவரத்துக் கழக பேருந்துகள் நிற்கும் நெடுஞ்சாலை தனியார் உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் விக்ரவாண்டி அருகே செயல்பட்டு வரும் அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா மற்றும் அரிஸ்டோ ஆகிய ஐந்து உணவகங்கள் சுகாதாரமற்ற உணவுப்பொருட்களை அதிக விலைக்கு விற்றது ஆய்வின் போது கண்டறியப்பட்டது. மேற்கண்ட உணவகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் மேற்கண்ட உணவகங்களின் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் நிறுத்துவதற்காக போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…