அரசு பேருந்துகளில் கட்டணம் இலவசம் !மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே போதும் !அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு
பள்ளி சீருடை அணிந்திருந்தால் அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கோடைவிடுமுறைக்கு பின் கடந்த ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டார்.அதன்படி ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.
இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், மாணவர்களுக்கு 24.20 லட்சம் இலவச பேருந்து சலுகை அட்டைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது .மாணவர்கள் பள்ளி சீருடை அணிந்திருந்தால் அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.