அரசு பஸ் ஸ்டிரைக் தொடரும் – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
அரசு போக்குவரத்துக்கு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவித்துள்ளது.
ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டமிட்டபடி போக்குவரத்து கழகங்களில் செயல்படும், தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப்., டி.டபிள்யூ.யு. ஆகிய தொழிற்சங்கங்கள் இன்று அதிகாலை முதல் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்ததால் தமிழகத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் நடந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியூ சவுந்திரராஜன், அரசு போக்குவரத்துக்கு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என்றும் கோரிக்கைகள் தொடர்பாக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளார். மேலும் அரசு அறிவித்த ரூ.1000 இடைக்கால நிவாரணம் ஏற்கக்கூடியதாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.