அரசு பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து..! 3 பெண்கள் உயிரிழப்பு..!
சிவகங்கை அருகே அரசு பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் அருகே திருமாஞ்சோலை அருகே அரசு பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சிவகங்கையில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த மோதலில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 3 பெண்கள் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.