பைக் மீது அரசு பேருந்து மோதல் – கணவன் கண்முன்னே மனைவி உயிரிழப்பு!
திருப்பூரில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் மனைவி உயிரிழப்பு, கணவர் படுகாயம்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே பைக் மீது அரசு பேருந்து மோதியதில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் ஓட்டுநர் முத்துமாணிக்கத்திடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.