அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் காலவகாசத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
மேலும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதுமட்டுமின்றி, கொரோனா ஊரடங்கு காரணமாகவும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாகவும் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பத்தை விநியோகிக்க வேண்டும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பம், இணைய வாயிலாக ஜூலை மாதம் 15-ம் தேதி தொடங்கியதாகவும், B.E/B.Tech மாணவர்களின் இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை, பகுதி நேர சேர்க்கையும் இந்தியத்தளம் வாயிலாக ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி நடைபெறும் என அமைச்சர் தெரிவித்தார். மேலும், அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்டது.
இந்நிலையில், சான்றிதழ் பதிவேற்றம் நாளை தொடங்க இருந்த நிலையில், ஆன்லைனில் சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் காலவகாசத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஜூலை 25 முதல் ஆக.5 வரை நடைபெறவிருந்த சான்றிதழ் பதிவேற்றம், ஆக.1 முதல் ஆக.10 வரை நடைபெறும் என அறிவித்துள்ளார். மாணவர்கள், http://tngasa.in என்ற வலைதளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இதுவரை 2.09 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…