உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.614 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு!
உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு.
தமிழ்நாட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5-வது மாநில நிதி ஆணையம் மூலம் ரூ.614 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. இதுபோன்று, தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்காக அடிப்படை மானியமாக 15-வது மத்திய நிதி ஆணையத்தின் மூலமாக ரூ.799 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கிராம ஊராட்சிகளுக்கு ரூ.639 கோடியும், ஒன்றியங்களுக்கு ரூ.119 கோடியும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.39 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.614 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு!#tngovt pic.twitter.com/vQ57KAJQoi
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) March 25, 2022