அரசு ஒத்திவைத்திருப்பது மிகச்சரியான முடிவு -அன்புமணி ராமதாஸ்

Default Image

தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பை தமிழக அரசு ஒத்திவைத்திருப்பது மிகச்சரியான முடிவு, இம்முடிவை நான் வரவேற்கிறேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 16-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.ஆனால் அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதுகுறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், 50%-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பிள்ளைகளை திறக்க வேண்டாம் என தெரிவித்தனர். இதனையடுத்து, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்படுவதாகவும், பள்ளிகள் திறப்பு தேதி குறித்து, சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் தமிழக அரசின் அறிவிப்பிற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பை தமிழக அரசு ஒத்திவைத்திருப்பது மிகச்சரியான முடிவு. இம்முடிவை நான் வரவேற்கிறேன். பண்டிகை காலங்களில் கொரோனா பரவல் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் இந்த விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை

கொரோனா வைரஸ் நோய் மிகவும் ஆபத்தானது. மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. எனவே, இனிவரும் நாட்களிலும் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்த முடிவு மருத்துவ வல்லுனர்கள் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். ஓணம் திருநாளின் போது கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படாதது தான் கேரளத்தில் கொரோனா அதிகரிக்கக் காரணம். தமிழகத்தில் அத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க தீபஒளி காலத்தில் கூடுதல் கட்டுப்பாட்டுடனும் எச்சரிக்கையுடனும் மக்கள் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்