சென்னை புழல் மத்திய சிறையில் 750-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.
இந்த தண்டனை கைதிகள் சிறைக்குள் உல்லாசமாக வாழ்க்கை நடத்திவருவது சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது. குறிப்பாக, உயர்பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் சர்வதேச கைதிகள் மற்றும் முக்கியக் கொலைவழக்கில் சிக்கிய கைதிகள் சிலர், சிறைக்குள் மெத்தை, டிவி, செல்போன், குலிங் கிளாஸ் , உயர் ரக உணவு என வெளியுலகுக்குச் சிறிதும் குறைவில்லாத அளவுக்கு சுகபோக வாழ்க்கையை சிறைக்குள் அனுபவித்து வந்தது புகைப்படங்கள்மூலம் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன்தொடர்ச்சியாக, புழல் சிறைக்குள் அதிரடி ஆய்வுசெய்யப்பட்டு, செல்போன், டி.வி, சமையலுக்குப் பயன்படுத்தக்கூடிய பொருள்களைக் காவல்துறையினர் பறிமுதல்செய்தனர். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும் ஆய்வு நடத்த சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா உத்தரவிட்டார். இந்தப் புகாரின் எதிரொலியாக, சிறைத் துறை அதிகாரிகள் மாற்றம் நிகழ்ந்துள்ளது. சென்னை புழல் சிறையில் உள்ள அதிகாரிகள், வேலூர், கோயம்புத்தூர், சேலம், திருச்சி ஆகிய சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மொத்தம் 8 பேர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
DINASUVADU
சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் நாங்க பன்னா தரமா இருக்கும் ஊருக்கே தெரியும் என்ற வசனத்தை வைத்திருப்பார். அந்த…
சென்னை : துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடல் விவகாரத்தில், மாணவர்களின் நலன் கருதி பல்கலைகழக மானிய குழு உறுப்பினரை…
டெல்லி : சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜியா உர் ரஹ்மான், மின்சார திருட்டு குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு உத்தரபிரதேச பவர்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…