சொகுசு வாழ்கை “அரசு நடவடிக்கை” அதிகாரிகள் மாற்றம்..!!

Default Image

புழல் சிறையில் கைதிகள் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துவருவதாக வெளியான புகாரையடுத்து, சிறைத் துறை அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

 

Image result for புழல் சொகுசு வாழ்கை

சென்னை புழல் மத்திய சிறையில் 750-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.

இந்த  தண்டனை கைதிகள்  சிறைக்குள் உல்லாசமாக வாழ்க்கை நடத்திவருவது சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது. குறிப்பாக, உயர்பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் சர்வதேச கைதிகள் மற்றும் முக்கியக் கொலைவழக்கில் சிக்கிய கைதிகள் சிலர், சிறைக்குள் மெத்தை, டிவி, செல்போன், குலிங் கிளாஸ் , உயர் ரக உணவு என வெளியுலகுக்குச் சிறிதும் குறைவில்லாத அளவுக்கு சுகபோக வாழ்க்கையை சிறைக்குள் அனுபவித்து வந்தது புகைப்படங்கள்மூலம்  வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன்தொடர்ச்சியாக, புழல் சிறைக்குள் அதிரடி ஆய்வுசெய்யப்பட்டு, செல்போன், டி.வி, சமையலுக்குப் பயன்படுத்தக்கூடிய பொருள்களைக் காவல்துறையினர் பறிமுதல்செய்தனர். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும் ஆய்வு நடத்த சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா உத்தரவிட்டார். இந்தப்  புகாரின் எதிரொலியாக, சிறைத் துறை அதிகாரிகள் மாற்றம் நிகழ்ந்துள்ளது. சென்னை புழல் சிறையில் உள்ள அதிகாரிகள், வேலூர், கோயம்புத்தூர், சேலம், திருச்சி ஆகிய சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மொத்தம் 8 பேர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்