அரசு பாராக மாறிய அரசு பள்ளி….அரங்கேறிய அவலம்….!!!பார்வையில்லாத பள்ளிகல்விதுறை…!!.சாடும் மக்கள்..!
அரசு மேல்நிலைப்பள்ளியை மது அருந்தும் கூடாரமாக குடிகாரர்கள் பயன்படுத்தி வருவதாகப் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் சோமனஅள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளி அருகே மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது இதனால் குடி பிரியர்கள் பள்ளி வளாகத்தை மது அருந்தும் கூடாரமாக மாற்றி அதனை பயன்படுத்தி வருவதாக பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் அச்சதுடன் , ஆத்திரத்துடனும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட சோமனஅள்ளியில் இந்த அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இருநூறு மீட்டர் தொலைவில் தான் மதுக்கடை உள்ளது. அங்கு மதுவை வாங்கிவிட்டு பச்சிழங்குழந்தைகள் பயிலும் பள்ளியின் தாழ்வாரம், நாட்டுப்பண் நடக்கும் கொடிக்கம்பம் உள்ளிட்ட இடங்களில் அமர்ந்து குடித்துவிட்டும் குடித்த மதுபாட்டில்களை அங்கேயே சிறிதும் பயமில்லாமல் விட்டுச் செல்கின்றனர்.
மேலும் விடுமுறை நாட்களில் பள்ளியை பாராக மாற்றிவிடுகின்றனர்.குறிப்பிட்டு சொன்னால் குழந்தைகளுக்கு விடப்படும் வாரவிடுமுறை நாட்களான சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின் திங்கட்கிழமை பள்ளிக்கு வந்தால் ஏராளமான மது பாட்டில்களும், அவற்றிக்கு பயன்படுத்தப்பட்ட தின்பண்டங்களின் சிப்ஸ் மீச்சர் போன்ற மீதங்களும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.
பள்ளி மாணவன் எதனை கண்ணால் கூட காண கூடாது என்று என்னும் நாம் அந்த மதுபாட்டில்களை அவர்களே அகற்றும் அவலத்தை அளித்து இருக்கிறார்கள் மது பிரியர்கள் இதனால் படிக்கும் பள்ளியை அசுத்தப்படுத்தும் மதுக்கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும்.
மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று அப்பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் கடுமையாக வலியுறுத்தியுள்ளனர்.இத்தனை திட்டங்களை போடும் பள்ளிக்கல்வித்துறை அந்த பள்ளிக்கு ஒரு வேலி போட்டு பள்ளியின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் பார்வையில்லாத பள்ளிக்கல்விதுறையாக செயல்படுவதாக அப்பகுதி மக்கள் விளாசி எடுக்கின்றனர்.
DINASUVADU