அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வேதநாயகி என்கிற முதுநிலை தணிக்கை ஆய்வாளராக பணியாற்றி வரும் அரசு பெண் ஊழியர் தனது பணிக்காலத்தில் மகப்பேறு விடுப்பில் சென்ற காரணத்தால் முதுநிலை கூட்டுறவு தணிக்கை ஆய்வாளராக 3 ஆண்டு பணிபுரியவில்லை எனக் கூறி பதவி உயர்வு பட்டியலில் என் பெயரை சேர்க்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வேதநாயகி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர் தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டம் பிரிவு 12-ல் விடுமுறை பதவி உயர்வுக்கு தடை அல்ல என்று குறிப்பிட்டு வாதிட்டார்.வாதத்தினை கேட்ட நீதிபதிகள், மகப்பேறு விடுப்பு காலத்தையும் பணிக்காலமாகவே கருதி அரசு பெண் ஊழியர்க்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டனர்.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…