அரசு பேருந்து அவலத்தை அம்பலப்படுத்திய ஓட்டுநர்…க்கு'சஸ்பெண்ட்'டை பரிசளித்த கொடுமை….!!
அரசுப் பேருந்தின் அவலநிலையை சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட அரசு பேருந்து ஓட்டுநர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பழனி கிளையில் ஓட்டுனரான இருப்பவர் விஜயகுமார்.பழனி – திருச்சி பேருந்தை இயக்கி வருகிறார்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் பேருந்து முழுவதும் ஒழுகியது, பிரேக், முகப்பு விளக்கு ஆகியவை சரிவர செயல்படவில்லை என்றும் இதனால் பேருந்தை இயக்க முடியவில்லை என ஒடுநர் விஜயகுமார் வீடியோ வெளியிட்டிருந்தார்.
மேலும் இதுகுறித்து கிளை மேலாளரிடம் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஒட்டுநர் விஜயகுமார் பேசிய வீடியோ சமூக வளைதலங்களில் வேகமாக பரவிய நிலையில், அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது. ஒட்டுநர் விஜயகுமாரின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்த நிலையில், பாராமரிப்பின்றி உள்ள அரசுப் பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்த வண்ணம் மேலோங்கியது.அரசு பேருந்தின் அவலநிலை என்ன என்பது அன்றாடம் நாம் அறிந்த ஒன்றே இதனை வெளிப்படுத்திய ஒட்டுநரின் துணிச்சலான செயலை பாராட்ட வேண்டும்.
பேருந்தில் தொங்கி கொண்டும்,உயிரிக்கு ஆபத்தான சூழ்நிலையில் பயணிக்கிறோம்.இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல பணிக்கு சென்ற விஜயகுமாரை, தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளதாகக் கூறி, அதற்கான உத்தரவையும் பழனி அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் வழங்கியுள்ளார்.
அதில் பணிநீக்கம் குறித்து தெரிவிக்கையில், பணியின்போது இருக்கையில் அமர்ந்து, பேருந்தை இயக்கிக் கொண்டே அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும்படி வாட்சாப்பில் செய்தியாக பேட்டி கொடுத்ததால் தற்காலிக பணி நீக்கம் செய்பட்டதாக ஆணையில் கிளை மேலாளர் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் விஜகுமார், தவறு செய்யாத தன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை ரத்து செய்து தனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் கிளை மேலாளரின் இந்த செயலுக்கு சமூக வலை தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், விஜயகுமாருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று தீவிரமடைந்து வருகிறது.நேர்மைக்கு கிடைக்கும் பரிசு எப்பொழுதுமே வித்தியாசமானதாகவே இருக்கும்,அப்படி இந்த நேர்மையான ஒட்டுநர்க்கு கிடைத்த பரிசு தான் “தற்காலிக பணிநீக்கம்”.
DINASUVADU