சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்துக்கு செங்கல்பட்டு அருகேயுள்ள பரனூர் என்ற சுங்கச்சாவடியில் கட்டணம் வழங்குமாறு கேட்டதால், பேருந்து ஓட்டுநருக்கும் கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி ஊழியருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதமானது முற்றி அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அரசுப் பேருந்தை சுங்கச்சாவடியின் குறுக்கே நிறுத்தி விட்டார் இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பேக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் நூற்றுக்கணக்கான பேருந்துகள் செல்ல முடியாமல் 5 மணி நேரமாக ஒரே இடத்தில் நின்றது.
மேலும் சம்பவம் நடந்த பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகள் ஆத்திரம் தாங்கமால் சுங்கச் சாவடியை அடித்து நெறுக்கி சூறையாடியனர். இந்த தகவல் அறிந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலவரம் செய்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர் இதனால் அந்த பகுதி 5 மணிநேரமாக பரபரப்புடன் காணப்பட்டது.
மேலும் இந்தசுங்கச்சாவடியில் பணிபுரியும் வடமாநிலத்தவர்கள் மிகவும் தரக்குறைவாக நடந்து கொள்வதாக சக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.சுங்க சாவடி சூறையாடப்பட்ட சம்பவத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…