நற்செய்தி.! தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 92,000- ஐ கடந்தது.!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 48,195 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று மட்டும் 3,035 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 89,532 லிருந்து 92,567 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,328 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,38,470 லிருந்து 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. இன்று தமிழ்கத்தில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று புதிதாக 1,140 பேருக்கு கொரோனா மேலும் 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 78,573 ஆக உயர்வு.
இன்று மட்டும் 3,617 பேர் குணமடைந்தனர்.தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது. இன்று மேலும் 66 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 2,032 ஆக அதிகரித்தது.