பொது அமைதி பாதித்தால் மட்டுமே குண்டர் சட்டம்.. டிஜிபி-க்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்!
குண்டர் சட்டத்தை தேவையில்லாமல் பயன்படுத்த கூடாது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவித்த வேண்டும்.
பொது அமைதி பாதிக்கப்படும் சூழலில் மட்டுமே குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்று டிஜிபி-க்கு தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார். அதில், பொது அமைதி பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும்.
தேவையின்றி குண்டர் சட்டத்தை பயன்படுத்தக் கூடாது என மாவட்ட எஸ்பிக்களுக்கு டிஜிபி அறிவுறுத்த வேண்டும். தமிழகத்தில் பெரும்பாலான வழக்குகளில் குண்டர் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்பு காவல் – பரிந்துரைக்கும் முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து சுற்றறிக்கை அனுப்பும்படியும் டிஜிபிக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.