மின்வேலி அமைத்தால் குண்டர் சட்டம் – நீதிமன்றம் பரிந்துரை
மின் வேலிகள் அமைக்க மின்சார திருட்டில் ஈடுபடுவோருக்கு எதிராக குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கலாம்.
வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. அதாவது, வனப்பகுதியில் விவசாய நிலங்களுக்கு மின் வேலிகள் அமைக்க மின்சார திருட்டில் ஈடுபடுவோருக்கு எதிராக குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மின்வேலியில் சிக்கி யானைகள் இறப்பதை தடுக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மின்சாரம் தாக்கி காட்டு யானைகள் உயிரிழப்பதை தடுக்க சட்டப்பேரவையில் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், மின்சாரம் தாக்கி யானைகள் இறப்பதை தடுக்க தாழ்வான மின்கம்பிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தமிழக அரசு தரப்பில் கூறியுள்ளனர்.