Google pay, Phonepe – கண்காணிக்கும் தேர்தல் ஆணையம்…!

Default Image

தொழில்நுட்ப வசதியுடன் Google pay, Phonepe மூலம் பணப்பரிமாற்றம் செய்யப்படுவதை தடுக்க குழு அமைத்துள்ள தேர்தல் ஆணையம். 

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து, தமிழகம் முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்குவதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் ஆணையம் எவ்வளவுதான் விதிமுறைகளை விதித்து கெடுபிடிகள் இருந்தாலும் வாக்குப் பதிவுக்கு செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக கூட அரசியல் கட்சிகள் பண விநியோகத்தை முடித்து விடுகின்றனர். இந்நிலையில் முன்பெல்லாம் கைகளில் கொடுக்கப்பட்ட பணம், தற்போது தொழில்நுட்ப வசதியுடன் Google pay, Phonepe மூலம் பணப்பரிமாற்றம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனையடுத்து, இதையும் தடுக்க தேர்தல் ஆணையம் குழு அமைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்