கூகுள் மேப்பில் வழிகாட்டப்போகும் அமிதாப் பச்சனின் குரல்.!
பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் குரலை கூகுளை மேப்பின் வழிகாட்டுதல் குரலுக்கு உபையோகப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது .
இன்றைய காலக்கட்டத்தில் அண்ட்ராய்டு கைபேசி இல்லாத எவரையும் பார்க்க முடியாது.இதில் பல்வேறு செயலிகளை நம் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்துகிறோம், அதனுடன் பயணிக்கிறோம்.இதில் முக்கிய பங்கு வகிப்பது Google Map ஆகும். வழிகள் கேட்டு தேடி அலைந்த காலம் போய் இன்று நாம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சுலபமாக செல்ல Google Map செயலியை பயன்படுத்துகிறோம். இதில் பல வசதிகள் உள்ளது அதில் குரல்வழி சேவை மூலம் நாம் செல்ல வேண்டிய இடத்தை கேட்டுக்கொண்டே செல்லலாம். ஆனால் இதுவரையில் கேட்ட கூகுள் குரல் அயல்நாட்டவர் குரலால் இன்று வரை இயங்குகிறது .
இந்த வழக்கத்தை கூகுள் நிறுவனம் இந்தியாவில் மாற்ற நினைத்துள்ளது. அதற்காக பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பட்சனின் குரலை கூகுள் மேப் குரலாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது .இன்னும் இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் ஏதும் கையெழுத்து ஆகவில்லை. அமிதாப் இதற்கு சம்மதம் தெரிவித்தால் அவருக்கு பெரும் தொகையை கொடுக்க கூகுள் முடிவு செய்துள்ளது. அதன் பின்கூகுள் மேப்பில் அமிதாப்பின் குரல் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒலிக்கும்.
அகில இந்திய வானொலியால் நிராகரிக்கப்பட்டவர் அமிதாப் பச்சன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது அவரது குரல் பல படங்களில் கம்பீரத்துடன் வசனம் பேசி இன்னும் ஒலித்து கொண்டுயிருக்கிறது .பச்சன், கடந்த 2005 ஆம் ஆண்டில் ஆஸ்கார் விருது பெற்ற மார்ச் ஆஃப் தி பெங்குவின் ஆவணப்படத்திற்கு தனது குரலை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், கூகிள் ஒரு பாலிவுட் பிரபலத்துடன் கைகோர்க்க இருப்பது இது முதல் முறை அல்ல கடந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்தில் வரும் பாலிவுட் நடிகர் அமீர்கானின் கதாபாத்திரமான ஃபிரங்கியின் உரையாடல்களை அத்திரைப்பட திரைப்பட தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் பிலிம்ஸ் (YRF) உடன் ஏற்கனவே இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதுவே அப்போதைய முதல் பெரிய ஒப்பந்தமாகும் .