திண்டுக்கல் தனியார் நூற்பாலையில் பயங்கர தீ விபத்து.! பல லட்ச மதிப்புள்ள பொருட்கள் சேதம்.!
திண்டுக்கல் மாவட்டத்தில் ஓர் தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் செட்டிநாயக்கன்பட்டி அருகே ஓர் தனியார் நூற்பாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பாலையில், தற்போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள், துணி உற்பத்திக்கு வைத்திருந்த நூல்கள் ஆகியவை எரிந்து சேதமாகியுள்ளன. இதில் வேலை செய்த ஊழியர்கள் பற்றியும் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் இன்னும் முழுதாக தகவல் வெளியாகவில்லை.