தூத்துக்குடி to இலங்கை., ரூ.20 லட்சம் பொருட்கள் கடத்தல்.! 4 பேர் அதிரடி கைது.! 

தூத்துக்குடி கோவளம் கடற்பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்களை இன்று க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்துள்ளனர்.

Goods smuggled to Sri Lanka in Tuticorin

தூத்துக்குடி : மஞ்சள் மூட்டைகள் பீடி இலைகள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவை தூத்துக்குடி முள்ளக்காடு கோவளம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு சிலர் கடத்த உள்ளதாக க்யூப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து க்யூ பிரிவு காவல்துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் க்யூ பிரிவு போலீசார் தூத்துக்குடி கோவளம் கடற்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.  அப்போது அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கொண்டு செல்வதற்காக வந்த சரக்கு வாகனத்தை மடக்கி பிடித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

போலீசார் பிடித்த அந்த சரக்கு வாகனத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான 30 கிலோ எடை கொண்ட 86 மஞ்சள் மூட்டைகள், 31 கிலோ ஏலக்காய், 59 பீடி இலை பண்டல்கள், சுமார் 200 முக அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தக் கடத்தல் தொடர்பாக ஏரல் பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் , விஷ்வா, பொட்டல் காடு பகுதியை சேர்ந்த வினித், தூத்துக்குடி ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜசீலன் ஆகிய நான்கு பேரை க்யூ பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த கடத்தல் தொடர்பாக வேறு யாருக்கும் தொடர்பு உண்டா என்பது குறித்தும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்