#குட் நியூஸ்: ரயில்வேயில் கருணை அடிப்படையில் வேலையில் சேர்ந்தவர்களுக்கு கால நீட்டிப்பு!

Default Image

இந்த கோரிக்கையை ஏற்று உத்தரவிட்ட மத்திய ரயில்வே அமைச்சருக்கு, சு.வெங்கடேசன் எம்பி நன்றி.

கருணை அடிப்படையில் ரயில்வே வேலையில் சேர்ந்தவர்கள், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற 2023 மே வரை அவகாசம் அளித்தது ரயில்வே அமைச்சகம். கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதிருந்தார். இந்த நிலையில், அவகாசத்தை நீடித்து மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. எனது கோரிக்கையை ஏற்று உத்தரவிட மத்திய ரயில்வே அமைச்சருக்கு, சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சு.வெங்கடேசன் எம்பி, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ரயில்வேயில் கருணை அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட காலம் 10ம் வகுப்புக்கு குறைந்த கல்வித் தகுதி உடையவர்கள் வேலையில் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் பயிற்சியாளர்கள் என்ற பெயரில் நியமிக்கப்பட்டார்கள். நிரந்தர ஊழியர்களுக்கான அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டாலும் நிரந்தரம் அளிக்கப்படாமல் இருந்தது.

ரயில்வேயில் கருணை அடிப்படையில் சேர்ந்தவர்கள், ஐந்தாண்டுகளில் பத்தாம் வகுப்பு தேர வேண்டும் என்பது நிபந்தனையாக இருந்தது. கொரோனா போன்ற காரணங்களால் அவர்கள் இந்த கால அவகாசத்துக்குள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற  முடியாமல் வேலைநீக்கம் செய்யப்படும் அபாயம் இருந்தது. இதுகுறித்து நான் ரயில்வே அமைச்சருக்கு, அவர்களின் கல்வித்தகுதி நிபந்தனையை ஒருமுறை விலக்கு அளித்து அவர்களை நிரந்தரம் செய்யவோ அல்லது கல்வித் தகுதி பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கவோ உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டேன்.

இப்போது ரயில்வே அமைச்சர் எனக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர்கள் 10ம் வகுப்பு தேர்வதற்கான கால அவகாசத்தை மே 2023 வரை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளதாக பதில் அளித்துள்ளார். இதன் மூலம் கருணை அடிப்படையில் வேலையில் சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள். இந்த உத்தரவை நல்கிய ரயில்வே அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்