பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து முடிவு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்.
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், விடுமுறை மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த அறிவிப்பு விரைவில் முதல்வர் அலுவலகத்தில் இருந்து வெளியாகும் என்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார். கொரோனா காலத்தில் விடுமுறை அளிக்கப்படாதல் பாடங்கள் நடத்தி முடிக்கப்படாமல் இருக்கிறது என்றும் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் விளக்கமளித்தார்.
கொரோனா காலத்தில் பள்ளிகள் இயங்காமல் இருந்ததே மாணவர்களிடையே மோதல்கள் ஏற்பட காரணம் என்று சமீபத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்கு மத்திய அரசின் மாணவர்களுக்கான திட்டத்தின் கீழ் மனநல ஆலோசனை வழங்கப்படும் கூறினார். இதனிடையே நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், ஒரு சில மாநிலங்களில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் விடுமுறை அளிக்க முடிவு எடுத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…