#GoodNews:பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரி முழுமையாக ரத்து-மத்திய அரசு அறிவிப்பு!
பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரியை முழுமையாக ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஜவுளித்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில்,பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரி மத்திய அரசால் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு ஜவுளித்துறை உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் இயங்கி வரும் தொழிற்சங்கங்கள் மற்றும் பாஜகவின் வேண்டுகோளை ஏற்று இறக்குமதி வரியை ரத்து செய்ததற்காக பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மேலும்,இது நம் மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்கிய தமிழ்ப் புத்தாண்டு பரிசு என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பருத்தி இறக்குமதிக்குச் சுங்க வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளித்துள்ளது நமது மத்திய அரசு.@BJP4TamilNadu மற்றும் தமிழகத்தில் இயங்கி வரும் தொழிற்சங்கங்களின் வேண்டுகோளை ஏற்றமைக்கு நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கும் நிதி அமைச்சர் திருமதி @nsitharaman pic.twitter.com/fUyuf9V5DZ
— K.Annamalai (@annamalai_k) April 13, 2022