இன்னுயிர் காப்போம் திட்டத்தால் 33,245 பேருக்கு பயனடைந்துள்ளனர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்.
தமிழக அரசின் 2022-23-ஆம் ஆண்டுக்கான முழுமையான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுவதற்கு முன்னதாக நடைபெற்ற கேள்வி நேரத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாலை விபத்தில் ஒருவர் கூட உயிரிழக்க கூடாது என தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
சாலை விபத்தில் ஒருவர் கூட உயிரிழக்க கூடாது என்னும் நோக்கத்தில் இன்னுயிர் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தால் 33,245 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
சாலை விபத்தில் சிக்கிய நபர்களை உடனடியாக, Golden Hours-க்குள் மருத்துவமனைக்கு கொண்டுவந்து, உயிரைக் காக்கக்கூடிய மனிதநேயப் பண்போடு பணியாற்றும் நல்ல உள்ளங்களுக்கு நற்சான்றிதழும், ரூ. 5,000 ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…