குட்நியூஸ்…நலவாரிய உறுப்பினர்களின் திருமண உதவித்தொகை உயர்வு – தமிழக அரசு அரசாணை!
தமிழகம்:நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித் தொகையினை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர், குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் திருமண உதவித்தொகையை ஆண்களுக்கு 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமும், பெண்களுக்கு 2 ஆயிரத்திலிருந்து, 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:
“2021-2022 ஆம் ஆண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானியக் கோரிக்கையின் போது நரிக்குறவர் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித் தொகையை ஆண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகவும் பெண்களுக்கு 2,000 ரூபாய ருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டது.
மேலும்,தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் திருமண உதவித் தொகையை ஆண்களுக்கு ரூ.2,000 லிருந்து ரூ.3,000 ஆகவும், பெண்களுக்கு ரூ.2,000 லிருந்து ரூ.5,000 ஆகவும் உயர்த்தி உரிய ஆணை வெளியிடுமாறும் அரசைக் கோரியுள்ளார்.
இந்நிலையில்,தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் இதர 14 நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் திருமண உதவித் தொகையை ஆண்களுக்கு ரூ.2,000 லிருந்து ரூ.3,000 ஆகவும், பெண்களுக்கு ரூ.2,000 லிருந்து ரூ.5,000 ஆகவும் உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.