தமிழகத்தை சார்ந்த யாத்ரீகள் மானியம் பெற விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.
2021-2022 ஆம் நிதியாண்டில் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டு யாத்திரையை முழுமையாக நிறைவு செய்த, தமிழ்நாட்டை சேர்ந்த யாத்ரீகள் மானியம் பெற விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவிப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது:
“2021-2022 ஆம் நிதியாண்டில் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டு யாத்திரையை முழுமையாக நிறைவு செய்த தமிழ்நாட்டை சேர்ந்த இந்து மதத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மானியம் வழங்கும் திட்டத்தின்படி,பின்வரும் நிபந்தனைகள் நெறிமுறைகளுக்கு உட்பட்டு மேற்கொண்டு யாத்திரையை நிறைவு செய்த யாத்ரீகர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதன்படி,01.04.2021 முதல் 31.03.2022 முடியவுள்ள காலத்தில் மானசரோவர், முக்திநாத் புனித யாத்திரை மேற்கொண்டு முழுமையாக நிறைவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பதாரர்கள் இத்துறை இணையதளமான https://hrce.tn.gov.in//hrcehome/index.php-ல் பதிவேற்றப்பட்டுள்ள உறுதிமொழியுடன் கூடிய விண்ணப்ப படிவங்களை மட்டுமே பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். அதன்படி விண்ணப்ப படிவத்தில் அனைத்து விவரங்களையும் எழுத்தால் முழுமையாக பூர்த்தி செய்து “இந்து” மதத்தை சார்ந்தவர் என்பதற்கான சான்று உள்ளிட்ட படிவத்தில் குறியிடப்பட்டுள்ள அனைத்து சான்று களையும் வரிசைப்படி இணைத்து பக்க எண்ணிட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலினைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
• மேலும் தேவையான விவரங்களை இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளம் https://hrce.tn.gov.in//hrcehome/index.php மூலம் தெரிந்து கொள்ளலாம்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு…
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…
டெல்லி : நாட்டின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது. பெயரை மாற்றுவதற்கான…