குட் நியூஸ்: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.192 குறைவு.!

தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.192 குறைந்தது.
தமிழகத்தில் மானியமில்லாத வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.192 குறைக்கப்பட்டுள்ளது. ஏப்ரலில் ரூ.761.50 ஆக இருந்த கேஸ் சிலிண்டரின் விலை, மே மாதத்தில் ரூ.569.50 ஆக குறைந்துள்ளது. மேலும் மானியமில்லாத வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை இதுவரை ரூ.1404 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.259.50 குறைந்து, ரூ.1144.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மே 3 ஆம் தேதி ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்படி, தமிழகத்திலும் கொரோனா தீவிரமடைந்து வருவதால் வரும் 3 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் 3 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு சார்ந்த துறைகளும் மூடமட்டுள்ளதால். இதனால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உணவிற்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடு பெரும் பொருளாதார வீழ்ச்சியை கண்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு துறையை சார்ந்தவர்கள் நிவாரண நிதியை வழங்கி வருகின்றார்கள். அதேபோல் பல்வேறு வங்கிகளும் கடனுதவி அளித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.192 குறைக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025