குட்நியூஸ்…மாணவர்களுக்கு உண்டி மற்றும் உறையுள் கட்டணம் ரூ.400 ஆக வழங்கப்படும் – தமிழக அரசு அரசாணை வெளியீடு!
கல்வி நிலையங்களுடன் இணைந்து விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உண்டி மற்றும் உறையுள் கட்டணத்தை ரூ.400 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2021-2022 ஆம் ஆண்டிற்கான கல்வி மானியக் கோரிக்கை உதவித் தொகை திட்டங்களின் கீழ் கல்வி நிலையங்களுடன் இணைந்துள்ள விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ கல்வி மாணவியருக்கு வழங்கப்படும் உண்டி மற்றும் உறையுள் கட்டணம் ரூ.400 ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
“2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்களால் “விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு உண்டி மற்றும் உறையுள் கட்டணத்தை எவ்வித பாகுபாடின்றி வழங்கும் பொருட்டு. கல்வி உதவித் தொகை திட்டங்களின் கீழ் கல்வி நிலையங்களுடன் இணைந்துள்ள விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு மாதாந்திர உண்டி மற்றும் உறையுள் கட்டணமாக தற்போது பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு 175 ரூபாய் தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு 350 ரூபாய், ஐடிஐ / பட்டயப்படிப்பு மற்றும் முதுகலை மாணவ, மாணவியருக்கு 225 ரூபாய் என்று வழங்கப்படுவதை அனைவருக்கும் 400 ரூபாயாக உயர்த்தி மொத்தம் 9 கோடி ரூபாய் கூடுதல் செலவில் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி,கல்வி நிலையங்களுடன் இணைந்துள்ள விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ கல்வி மாணவியருக்கு வழங்கப்படும் உண்டி மற்றும் உறையுள் கட்டணம் ரூ.400 ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.