குட்நியூஸ்..20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு- அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு..!

2001-2002 முதல் 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு ஒரு சிறப்பு வாய்ப்பை அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் ஓர் முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது.அதாவது,2001-2002 கல்வியாண்டு (3 வது செமஸ்டர்) முதல் 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வருகின்ற நவம்பர் – டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி,இன்று முதல் https://coe1.annauniv.edu/home/ என்ற அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழக்கமான தேர்வுக்கட்டணத்துடன் கூடுதலாக ரூ.5,000 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,தேர்வு அட்டவணை, தேர்வு முறை, தேர்வு மையம் தொடர்பாக அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025