Good News: தமிழகத்தில் சமூக தொற்று இல்லை – பீலா ராஜேஷ்

தமிழகத்தில் புதிதாக 102 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். ஏற்கனவே 309 பேருக்கு பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அது 411 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 102 பேரின் 100 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் மொத்தம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 பேரில் 364 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கொரோனவால் பாதிக்கப்பட்ட 411 பேரின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் அமெரிக்காவில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இந்த நோய் யாரை வேண்டுமானாலும் தாக்கலாம். அதனால் தகவல் வரும்போது வீடு வீடாக சென்று சோதனை செய்து வருகிறோம். இதில் நிறைய பணியாளர்களை பயன்படுத்தி வருகிறோம் என்றும் இது நோய் தான், எளிதில் குணப்படுத்திவிடலாம் என தெரிவித்தார். அதனால் யாரும் பயப்பட வேண்டாம். ஆனால் கொஞ்சம் விழிப்புணர்வு வேண்டும் என்று குறிப்பிட்டார்.
எதாவது அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும். 20 நாட்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவீர்கள் என கூறினார். அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் முழுவவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் கொரோனா தொற்றில் இன்னும் 2 ஆம் நிலையில்தான் இருக்கிறது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறவில்லை என குறிப்பிட்டார். மேலும் தமிழகம் முழுவதும் 90,412 பேர் வீடு கண்காணிப்பில் உள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025