ஆடிப்பெருக்குக்கு இல்லத்தரசிகளுக்கு இன்பச்செய்தி! தங்கம் விலை குறைவு…
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று குறைந்தது.
ஆடி மாதத்தில் ஆடி 18 எனும் ஆடிப் பெருக்கு விழாவையொட்டி, இன்று பொதுமக்கள், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் புனித நீராடி, குல தெய்வம், கோவில் வழிபாடு செய்து ஆடிப்பெருக்கை கொண்டாடி வருகின்றனர். இந்த சமயத்தில், தங்கம் விலை ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் செலுத்தியாக உள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து, ரூ.38,416க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 குறைந்து, ரூ.4,802க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்று சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலை கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து, 5239 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 41,912 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,390 ரூபாயாகவும் விற்பனையாகிறது.
சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.63க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது.
தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 5.30 டாலர்கள் குறைந்து, 1784.10 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி, 10 கிராமுக்கு,17 ரூபாய் குறைந்து, 51,365 ரூபாயாக காணப்படுகின்றது. இதே வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 235 ரூபாய் குறைந்து, 57,351 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.