மாணவர்களுக்கு குட் நியூஸ்! தென்காசியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

இன்று அறிவிக்கப்பட்ட பள்ளி விடுமுறையை ஈடு செய்ய நவம்பர் 30 வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tenkasi School Leave

தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் அன்று ஒரு நாள் மட்டும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் விடுமுறை அறிவித்திருந்தார்.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக இன்று (நவ.-23) பள்ளி முழு வேலை நாளாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கை வெளிவந்தது. ஆனால், அதன் பின் வாக்காளர் முகாம் (சேர்க்கை, நீக்கம் மற்றும் சரிபார்ப்பு) இன்று நடைபெறுவதாக அறிக்கை வெளியானது இதனால், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவலின்படி வாக்காளர் முகாம் இன்று தென்காசியில் உள்ள பள்ளிகளில் நடைபெறுவதால் நவம்பர் 23-ம் அதாவது இன்று பள்ளி வேலை நாள் அறிவித்திருந்தது ரத்து செய்யப்பட்டு இன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்ய வரும் நவ-30 (சனிக்கிழமை) அன்று பள்ளி முழு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இன்றும் நாளையும் விடுமுறை என்பதால் தென்காசி பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

DMKProtest
Gyanesh Kumar
gold price
virat kohli lion
CrimeAgainstWomen
LIVE DMK
Maaveeran sk