பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களுக்கு நற்செய்தி – தமிழக அரசு அரசாணை வெளியீடு!
பொதுப்பணித் துறையில் ஒப்பந்ததாரர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதுமானது என அறிவிப்பு.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பொதுப்பணித் துறையில் ஒப்பந்ததாரர்கள் ஆண்டுக்கு ஒருமுறை பதிவை புதுப்பித்து வந்த நிலையில், இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் வகுப்பு ஒப்பந்ததாரர்கள் ரூ.10 கோடிக்கும் மேலான ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் இரண்டாம் வகுப்பு ஒப்பந்தரராகள் ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடி வரை ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், மூன்றாம் வகுப்பு ஒப்பந்ததாரர்கள் ரூ.2 கோடியில் இருந்து ரூ.5 கோடி வரையும், நான்காம் வகுப்பு ஒப்பந்ததாரர்கள் ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.2 கோடி வரையும், ஐந்தாம் வகுப்பு ஒப்பந்ததாரர்கள் ரூ.50 லட்சம் வரை ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களுக்கு நற்செய்தி – தமிழக அரசு அரசாணை வெளியீடு!#TNGovt pic.twitter.com/syhlbmS9D2
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) December 21, 2021