மாற்றுத்திறனாளிகளுக்கு குட்நியூஸ்..! மீண்டும் இல்லம்…அமைச்சர் கீதா ஜீவன் அசத்தல் அறிவிப்பு..!
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழக்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், மீண்டும் இல்லம்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழக்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மீண்டும் இல்லம் :
அதன்படி, முதலில் மனநலம் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்களை சமுதாயத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் ‘மீண்டும் இல்லம்’ எனும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் தலா 2 இல்லங்கள் அமைக்க 750 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் :
மேலும், இரண்டு கால்களில் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இரண்டு சக்கர இணைப்பு பொருத்தப்பட்ட ஸ்கூட்டர், இனிமேல் ஒரு காலில் குறைபாடு இருப்பவர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அதன் முதற்கட்டமாக, 500 மாற்றுத்திறனாளி பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.