நகை பிரியர்களுக்கு நற்செய்தி – தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைவு!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து, சவரன் ரூ.37,048க்கு விற்பனை.
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து, 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.37,048க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 குறைந்து, ரூ.4,631க்கு வர்த்தகமாகிறது.
24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.24 குறைந்து, ரூ.4,995க்கும், ஒரு சவரன் விலை ரூ.192 குறைந்து, ரூ.39,960க்கு விற்பனையாகிறது. இதுபோன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 70 காசு குறைந்து, ரூ.71க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.71,000 விற்பனை செய்யப்படுகிறது.