இல்லத்தரசிகளுக்கு இன்ப செய்தி..! குறைந்தது சமையல் எண்ணெய் விலை…!
தமிழகத்தில் சமையல் எண்ணெய்களின் விலைகள் ஒரு கிலோவுக்கு ரூ 10 வரை குறைந்துள்ளன.
மத்திய அரசு கடந்த நவம்பர் 3-ஆம் தேதி இரவு, பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்தது. இந்நிலையில் தற்போது, சமையல் எண்ணெய்கள் மீதான வரிகளையும் மத்திய அரசு குறைத்துள்ளது.
எண்ணெய்களின் மீதான வேளாண் செஸ், கச்சா பாமாயிலுக்கு 20 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதம் ஆகவும், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய்க்கு 5 சதவீதமாகவும் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆர்பிடி பாமோலின் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் அடிப்படை வரி 32.5 சதவீதத்தில் இருந்து 17.5 சதவீதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் சமையல் எண்ணெய்களின் விலைகள் ஒரு கிலோவுக்கு ரூ 10 வரை குறைந்துள்ளன. உதாரணமாக, ஒரு கிலோ பாமாயிலின் விலை 7 ரூபாயும், கடலை எண்ணெயில் விலை 10 ரூபாயும் குறைந்துள்ளது.